கர்நாடகத்தில் 129 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 26 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 101 பேர், துமகூருவில் 7 பேர், சித்ரதுர்காவில் 6 பேர் உள்பட 129 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரத்து 41 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகர், மைசூருவில் தலா ஒருவர் என 2 பேர் இறந்தனர். 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 24 பேர் இறந்து உள்ளனர். நேற்று 206 பேர் குணம் அடைந்தனர். 39 லட்சத்து ஆயிரத்து 636 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 341 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story