கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம்; முஸ்லிம் மாணவிகள் ஆவேசம்
கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம் என்று முஸ்லிம் மாணவிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு:
ஹிஜாப் விவகாரத்தில் மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி ஹாசனை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் கூறுகையில், ‘ஹிஜாப் எங்களது உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது. கல்விக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்போம். ஆனால் ஹிஜாப்பை விட்டு கொடுக்கமாட்ேடாம். ஹிஜாப் எங்கள் மூச்சு.
பல ஆண்டுகளாக இதை அணிந்துதான் பள்ளி, கல்லூரிக்கு வருகிறோம். திடீரென்று தடை செய்தால் எப்படி. வரும் 21-ந் தேதி தேர்வு நடைபெறுகிறது. ஹிஜாப் அணிந்துதான் தேர்வு எழுத வருவோம். ஒரு வேலை அனுமதி மறுத்தால் நாங்கள் தேர்வை புறக்கணிப்போம். கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம்' என்றனர்.
Related Tags :
Next Story