குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு: வாலிபரை கொன்று உடல் புதைப்பு - தாய்-மகன் உள்பட 4 பேர் கைது


குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு: வாலிபரை கொன்று உடல் புதைப்பு - தாய்-மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 2:46 AM IST (Updated: 16 March 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த வாலிபரை கொன்று புதைத்த தாய்-மகன் உள்பட 4 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

ஹாசன்:

வாலிபர் மாயம்

  ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா பள்ளுபேட்டையை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அனில்ராஜ் (26). இவரது நண்பர் அதேப்பகுதியை சேர்ந்த பிரசாத். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தகராறில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால் முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  இந்த நிலையில் அனில்ராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பர் பிரஜ்வெல் என்பவரின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய ெபற்றோர், பல இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கொன்று புதைப்பு

  இந்த நிலையில் பிரசாத்தின் வீட்டின் அருகே இருந்த மணல் மேடு பகுதியில் மனித விரல்கள் தெரிந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் இதுகுறித்து, சக்லேஷ்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். பின்னர் அந்தப்பகுதியில் குழித்தோண்டி பார்த்தனா். அப்போது, அங்கு அனில்ராஜின் உடல் இருந்தது. இதனை பார்த்து போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

  அப்போது தான், அனில்ராஜை மர்மநபர்கள் கொலை ெசய்து உடலை குழித்தோண்டி புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் தகராறு செய்ததால்...

  அனில்ராஜை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பிரசாத் மாயமாகி இருந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் பிசாத்தின் தாய், சகோதரியை பிடித்து விசாரித்தனர். அப்போது, சம்பவத்தன்று அனில்ராஜ், மது அருந்திவிட்டு வந்து பிரசாத் வீட்டில் தகராறு செய்துள்ளார்.

  இதனால், ஆத்திரமடைந்த பிரசாத், அவருடைய தாய், சகோதரி மற்றும் உறவினர் மோகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அனில்ராஜை அடித்து கொன்று உடலை வீட்டின் அருகே புதைத்தது தெரியவந்தது.

4 பேர் கைது

  இதுகுறித்து சக்லேஷ்புரா போலீசார் வழக்குப்பதிவு தலைமறைவாக இருந்த பிரசாத், அவருடைய தாய், சகோதரி, உறவினர் மோகன் ஆகிய 4 பேரை கைது ெசய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story