பங்குனி உத்திர திருவிழா: ஈரோடு வழியாக பழனிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஈரோடு வழியாக பழனிக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை சென்றனா்.
ஈரோடு
பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர விழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுவதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்கிறார்கள். நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து பாதயாத்திரையாக சென்றனர்.
Related Tags :
Next Story