மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டுக்கு பதிலாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வின் பேரன் என்ற அறிவிப்புடன் வலம் வரும் வாலிபர்
மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டுக்கு பதிலாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வின் பேரன் என்ற அறிவிப்புடன் வலம் வரும் வாலிபர் புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
நாகர்கோவில்:
மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டுக்கு பதிலாக
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வின் பேரன் என்ற அறிவிப்புடன் வலம் வரும் வாலிபர் புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் எம்.ஆர்.காந்தி. இவர் நாகர்கோவில் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கட்சி பணிகள் செய்வதற்காக அவர் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படம் பரவி வருகிறது. அந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் இல்லை. அதற்கு பதிலாக 'கிராண்ட்சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி' என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்ட அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த புகைப்படத்துக்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நம்பர் பிளேட் இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற அறிவிப்பு போர்டு வைக்கலாமா? என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
---
Related Tags :
Next Story