8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது


8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 16 March 2022 4:37 PM IST (Updated: 16 March 2022 4:37 PM IST)
t-max-icont-min-icon

8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரி அருகே உள்ள கரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜசேகரன் (வயது 28) கட்டிட மேஸ்திரி. இவர் 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் நெருக்கம் அதிகரித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அந்த சிறுமியின் வயிறு பெரிதாக ஆனது. உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் அந்த சிறுமியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்ததும், கருகலைப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து லத்தேரி போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story