நாகநதி கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
நாகநதி கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
அடுக்கம்பாறை
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே நாகநதி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. கணியம்பாடி ஒன்றியக் குழு துணைத்தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணைத் தலைவர் ஷீலா ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி வரவேற்றார். கணியம்பாடி ஒன்றியக் குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 167 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர். விழாவில் மாடுகள் முட்டியதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் இளைஞர்கள் செய்தனர்.
Related Tags :
Next Story