செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 16 March 2022 5:44 PM IST (Updated: 16 March 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பொன்மலைப்பட்டி, மார்ச்.17-
திருச்சி அருகே மேலகல்கண்டார் கோட்டையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது.  இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி  கடந்த 14-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து முதல்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன்தினம் 2-ம் கால யாகசாலை பூஜையும், 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். மதியம் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story