மீன்பிடி வலையை திருடிய வாலிபர் கைது


மீன்பிடி வலையை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 5:45 PM IST (Updated: 16 March 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீன்பிடி வலையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் சூசையா (வயது 50). இவருக்கு சொந்தமான மீன்பிடி வலையை கடந்த 8-ந் தேதி யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று விட்டாராம். இது குறித்து சூசையா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூசையாவின் மீன்பிடி வலையை பெரியதாழையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வெள்ளத்துரை (27) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வெள்ளத்துரையை கைது செய்தார். அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி வலையையும் போலீசார் மீட்டனர்.

Next Story