கள்ளன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது


கள்ளன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 16 March 2022 5:53 PM IST (Updated: 16 March 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

கள்ளன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது

திருச்சி, மார்ச்.17-
தமிழ்நாடு கள்ளர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவண தேவர் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் உறையூர் சாமி, ஒருங்கிணைப்பாளர் அகிலன், திருச்சி மாவட்ட தலைவர் மகேஷ்வரன், செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் அணி தலைவர் முருகானந்தம் உள்பட பலர் திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரித்தாவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
டைரக்டர் சந்திரா தயாரிப்பில் கரு.பழனியப்பன் நடிக்கும் திரைப்படத்திற்கு கள்ளன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்கள் கள்ளர் சமூகத்தினர். தமிழகத்தில் 40 லட்சம் கள்ளர் சமூகத்தினர் உள்ளனர். தமிழக அரசு ஆவணங்களில் கள்ளன் என்று இருந்த பெயர் பின்னர் கள்ளர் என திருத்தி அமைக்கப்பட்டது. அந்தப் பெயரிலேயே தமிழக அரசு சாதி சான்றிதழ் வழங்குகிறது. கள்ளன் என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த திரைப்படம் கொள்ளை கூட்ட செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. கள்ளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் திருட்டு உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது போல் காண்பிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தினால் தென் மாவட்டங்களில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் இந்த கள்ளன் திரைப்படத்தை திருச்சி மாவட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story