கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்


கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 6:01 PM IST (Updated: 16 March 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

திருச்சி, மார்ச்.17-
ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வர விதித்த அரசின் தடை உத்தரவு சரி என்றும், சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐகோர்ட்டின் இந்த உத்தரவு முஸ்லிம்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் 1.30 மணிக்கு கல்லூரி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பினர். அப்போது, டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் அக்கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் சிலர் ஒன்று திரண்டு  பள்ளி, கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தடை விதித்தது செல்லும் என கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர் ஹபீப் முகமது தலைமை தாங்கினார்.  மேலும் கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அது தங்களுக்கு சாதகமாக வராத பட்சத்தில் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராடுவோம் எனவும் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் வைத்திருந்தனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் சிலர் வந்து அமைதிப்படுத்தி கலைந்துபோக செய்தனர்.

Next Story