தஞ்சையை சேர்ந்தவர் கைது


தஞ்சையை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 16 March 2022 6:38 PM IST (Updated: 16 March 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே 2 வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த தஞ்சையை சேர்ந்தவரை போலீசார் கைதுசெய்து, அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே 2 வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த தஞ்சையை சேர்ந்தவரை போலீசார் கைதுசெய்து, அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 
நகைகள் கொள்ளை 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வடகரை ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 54). இவரது மனைவி மீரா(50). கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி நள்ளிரவில் வீட்டின் பின்புற கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 28 பவுன் நகைகள், மற்றும் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.  இதுகுறித்து பழனிவேல் வலங்கைமான் போலீசில் புகார் ெகாடுத்தார். 
இதேபோல் வலங்கைமானை அடுத்த மணலூர் ஊராட்சி சோத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். கடந்த ஜனவரி மாதம் இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் பீேராவில் இருந்த 12 பவுன் நகைகள்  மற்றும் ஒரு கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜெயக்குமார் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். 
வாகன சோதனை 
இந்த 2 வழக்குகள் தொடர்பாக திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, ஏட்டு செந்தில் உள்ளிட்ட போலீசார் மர்மநபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வலங்கைமானை அடுத்த விருப்பாச்சிபுரம் கடைத்தெருவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 
கைது; 30 பவுன் நகைகள் பறிமுதல் 
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் பதில் அளித்தார். மேலும் அவர் தஞ்சை மாவட்டம் அகரமாங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த சின்னப்பர்(51) என்பதும், பழனிவேல், ஜெயக்குமார் ஆகியோரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பரை கைது செய்து அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.  
----


Next Story