மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 16 March 2022 6:38 PM IST (Updated: 16 March 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 51). விவசாயி. இவர், மஞ்சளாறு பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லியூரை சேர்ந்த கார்த்திக் (21) என்பவர், மஞ்சளாற்றில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அல்லியூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு மெயின் ரோட்டில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தனர். 

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். 

கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story