மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி


மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 March 2022 6:57 PM IST (Updated: 16 March 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கி பேசுகையில்,  மாணவர்களுக்கு புழுத்தொற்றினால் பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே மாணவர்கள் குடற்புழு நீக்க மாத்திரையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை உட்கொள்ள வேண்டும் என்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை மதுராந்தகி செய்திருந்தார். 

Next Story