கன்னியாகுறிச்சி பகுதியில் பாலம் திறக்கப்பட்டது


கன்னியாகுறிச்சி பகுதியில் பாலம் திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 16 March 2022 7:02 PM IST (Updated: 16 March 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கன்னியாகுறிச்சி பகுதியில் பாலம் திறக்கப்பட்டது.

திருமக்கோட்டை:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கன்னியாகுறிச்சி பகுதியில் பாலம் திறக்கப்பட்டது. 
கோரிக்கை 
திருமக்கோட்டை அருகே உள்ள கன்னியாகுறிச்சி பகுதியில்  தார்ச்சாலை போடப்பட்டு பாலங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் பொதுமக்கள் செல்ல தனி வழி ஏற்படுத்தாமல் பாலம் கட்டுமான பணிகள் நடந்தது. இதனால் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை ெதரிவித்தனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தனி பாதை அமைக்கவும், பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
பாலம் திறக்கப்பட்டது
இதுகுறித்த செய்தி படத்துடன் ‘தினத்தந்தி’யில் வெளிவந்தது. இதன் எதிரொலியாக பால பணிகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 


Next Story