கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்


கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 March 2022 7:04 PM IST (Updated: 16 March 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கூடலூர்:

கூடலூர் நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தெருக்கள் மற்றும் தொட்டிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். 

மேலும் சேகரித்து வைக்கப்படுகிற தண்ணீரில் அபேட் மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி அனைத்து வார்டுகளிலும் வீதி, வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. இந்த பணியில் நகராட்சி ஆணையாளர் சித்தார்த் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story