திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 16 March 2022 7:34 PM IST (Updated: 16 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான பொருளியல்துறை வினாடி வினா போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்

திருச்செந்தூர்:
நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் துறை மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு பொருளியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களான ஞான அபினாஷ், இசக்கிராஜா ஆகியோர் பங்குபெற்றனர். இவர்கள் போட்டியில் 2-வது பரிசை பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ், வகுப்பு ஆலோசகர் மு.கணேசன், பொருளியல் துறை வினாடி-வினா பயிற்சியாளர்களான பேராசிரியர் தி.முத்துக்குமார், வீ.சிவ இளங்கோ மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.

Next Story