கோடை சீசனையொட்டி ஊட்டியில் படகுகளை சீரமைக்கும் பணி


கோடை சீசனையொட்டி ஊட்டியில் படகுகளை சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 16 March 2022 8:15 PM IST (Updated: 16 March 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் பழுதடைந்த படகு களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அவை வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்படுகிறது.

ஊட்டி

கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் பழுதடைந்த படகு களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அவை வர்ணம் தீட்டி புதுப்பிக்கப் படுகிறது.

183 படகுகள்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக துடுப்பு படகு, மிதி படகு, மோட்டார் படகு என மொத்தம் 183 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

 வாத்து, மயில், டிராகன் போன்ற வடிவங்களில் படகுகள் இயக்கப்படுவ தால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சவாரி செய்து வருகின்றனர். உயிர் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்த பின்னரே சவாரிக்கு அனுமதிக்கப் படுகின்றனர். 

வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தருவார்கள்.

சீரமைப்பு பணி

கோடை சீசனை முன்னிட்டு படகு இல்லத்தில் பழுதடைந்த படகுகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மோட்டார் படகுகள் கரையோரத்துக்கு கொண்டு வரப்பட்டு, பழுதான இருக்கைகள், கைப்பிடி களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

படகுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதிகளை ஒட்டி பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் சில மோட்டார் படகுகளில் மேற்கூரை அதிக எடையுடன் இருப்பதால், சவாரியின் போது இழுவை திறன் குறைந்த காணப்படுகிறது.

 இதை கருத்தில் கொண்டு மேற்கூரையை அகற்றிவிட்டு, குறைந்த எடை உடைய மேற்கூரை புதிதாக பொருத்தப்படுகிறது. இதற்காக அளவீடு செய்து சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் படகுகளுக்கு வர்ணம் தீட்டப்படுகிறது. 

செல்பி ஸ்பாட்

இதுகுறித்து படகு இல்ல மேலாளர் சாம்சன் கூறும்போது, கோடை சீசனை ஒட்டி படகுகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. சுற்றுலா பயணி களை கவர மலர், அலங்கார செடிகள் உடன் செல்பி ஸ்பாட் அமைக்கப் பட்டு உள்ளது என்றார்.


Next Story