பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
மத்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துடன் நீலகிரி வன கோட்டங்களை இணைப்பதை ரத்து செய்ய வேண்டும், வனம் சார்ந்த பகுதியில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம், உரிமைகள், அதிகாரத்தை மீட்க வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடல் முன்பு நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட செயலாளர் விஜயசிங்கம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story