கூடலூர் கோத்தகிரியில் வனப்பகுதியில் காட்டுத்தீ


கூடலூர் கோத்தகிரியில் வனப்பகுதியில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 16 March 2022 3:07 PM (Updated: 16 March 2022 3:07 PM)
t-max-icont-min-icon

கூடலூர் கோத்தகிரியில் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தனமலையில் இரவு 7 மணிக்கு காட்டு தீ பரவியது. 

மேலும் மலையில் உள்ள முருகன் கோவில் அருகே தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடலூரில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சந்தன மலையில் பரவிய காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். 

இதனால் தீ கட்டுக்குள் வந்தது. இருப்பினும் 1 ஏக்கரில்  புல்வெளிகள் சேதமடைந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் அரசுப் பள்ளியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. 

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி கருப்பசாமி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் அணைத்தனர். இதில் அரை ஏக்கரில் செடிகள் மற்றும் கொடிகள் எரிந்து நாசமானது.


Next Story