அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க 7-வது ஊதிய குழு-பசவராஜ் பொம்மை


அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க 7-வது ஊதிய குழு-பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 16 March 2022 9:12 PM IST (Updated: 16 March 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க 7-வது ஊதிய குழு அமைப்பதாக சட்டசபையில் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக பட்ஜெட் கடந்த 4-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு பசவராஜ் பொம்மைக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு கடிதம் எழுதினார். அதில் கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க 7-வது ஊதிய குழு அமைக்க வேண்டும் என்று கோரினார். எடியூரப்பாவின் இந்த கோரிக்கை பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, 7-வது ஊதிய குழு அமைப்பது குறித்து பசவராஜ் பொம்மை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போது அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில் சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பசவராஜ் பொம்மை பதிலளித்தார்.

அப்போது அவர், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவா்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க 7-வது ஊதிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் எடியூரப்பாவின் கோரிக்கையை பசவராஜ் பொம்மை ஏற்று கொண்டுள்ளார். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story