கர்நாடகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி-மந்திரி சுதாகர் தொடங்கி வைத்தார்
கர்நாடகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொடங்கி வைத்தார்
பெங்களூரு: கர்நாடகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொடங்கி வைத்தார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி
கர்நாடகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா பெங்களூருவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-
12 வயதுக்கு மேற்பட்ட 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனால் கர்நாடகத்தில் இன்று இந்த பணியை தொடங்கி வைத்துள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. பெற்றோரின் கவலையை பிரதமர் மோடி தீர்த்துள்ளார். கர்நாடகத்தில் 20 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
10 கோடி டோஸ்
நாடு முழுவதும் இதுவரை 180 கோடி டோஸ் தடுப்பூசியும், கர்நாடகத்தில் 10 கோடி டோசும் போடப்பட்டுள்ளது. வருகிற நாட்களில் பூஜ்ஜியம் முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி போடப்படுகிறது. 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும்.
உக்ரைனில் இருந்து கர்நாடகம் திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பு குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசுடனும் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு சுதாகர் பேசினார்.
Related Tags :
Next Story