பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
திருப்பூர்:
தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் 14 நாட்கள் முகாமிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்டம், என்.சி.சி. மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, அவசர காலங்களில் அருகில் இருப்பவர்களுக்கு உதவும் வழிமுறைகள், முதலுதவி அளிக்கும் முறை, காயமடைந்தவர்களை மாடியில் இருந்து கயிறு மற்றும் போர்வையால் எவ்வாறு காப்பாற்றி மீட்பது என பேரிடர் மீட்பு படையினர் செய்முறை விளக்கம் அளித்தனர்.
முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story