தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்முற்றுகையிட்டு மனு
தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்முற்றுகையிட்டு மனு
அவினாசி:
அவினாசி அருகே துர்க்கை அம்மமன் கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள்முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
துர்க்கை அம்மன் கோவில்
அவினாசி அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி அசநல்லிபாளையத்தில் பழமைவாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். எனவே திருவிழா தொடர்பாக அசநல்லிபாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று அவினாசி தாலுகா அலுவலகம் வந்தனர். பின்னர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அசநல்லிபாளையத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தி வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக ராமன் என்கிற பூசாரி பூஜை செய்துவந்த நிலையில் அவரது உறவினர் மாணிக்கம் இனிமேல் நான்தான் பூஜை செய்வேன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இடையூறு
நீதிமன்றத்தில் ராமன் பூஜை செய்ய தீர்ப்பவழங்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்தரப்பில் 5 குடும்பத்தினர் திருவிழா நடத்த இடையூறு செய்கின்றனர். எனவே அவர்களை கண்டித்து பொதுமக்கள் சார்பாக பாதுகாப்புடன் திருவிழா நடதத அனுமதி வழங்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story