தென்னை மரங்கள் பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம்


தென்னை மரங்கள் பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம்
x
தினத்தந்தி 16 March 2022 9:48 PM IST (Updated: 16 March 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்கள் பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம்

போடிப்பட்டி:
கோடை காலத்தில் தென்னை மரங்கள் பராமரிப்பில் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வேளாண்துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது.மேலும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் மேலும் பல விவசாயிகள் தென்னை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.தற்போது உடுமலை பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது.இதனால் தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள வேளாண்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-
கோடையில் தென்னை மரங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.   வரப்புகள் அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் தற்போது சொட்டு நீர்ப்பாசனம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதால் குழாய்களில் அடைப்பு நீக்கி சுத்தப்படுத்தி சீராக நீர் பாய்வதை உறுதி செய்ய வேண்டும்.
சிகப்பு கூன் வண்டு
பொதுவாக தென்னை மரங்களின் வேர்கள் தண்ணீர் மற்றும் உரத்தைத் தேடி 300 அடி நீளம் வரை செல்வதாக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆழமாக உழவு செய்யும்போது தென்னை மரத்தின் வேர்கள் அறுபடும் அபாயம் உள்ளது.எனவே ஆழமாக உழக்கூடிய சட்டிக்கலப்பை, கல்டிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்தி தென்னந்தோப்புகளில் உழவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தென்னை மரங்களிலிருந்து 5 அடி தள்ளி உழவு செய்ய வேண்டும்.
அந்த காயங்களின் வழியாக சிகப்பு கூன் வண்டு மரங்களுள் புகுந்து இனப்பெருக்கம் செய்து மரத்தை முழுவதுமாக அழித்து விடும் அபாயம் உள்ளது.மேலும் கழிவு மட்டைகள் மற்றும் ஓலைகளை தூளாக்கியோ, முழுவதுமாக தென்னை மரங்களுக்கு அடியில் மூடாக்காகவோ பரப்பி விடவும். இது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், மண்புழு போன்ற நன்மை தரும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். மேலும் கோடை காலத்தில் தென்னை மரங்களில் பூக்கள் கருகி பிஞ்சுகள் உதிர்வது உள்ளிட்ட குறைபாடுகள் தென்பட்டால் வேளாண்துறையினரின் ஆலோசனைகளைப் பெற்று உரிய மருந்துகளை இடவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story