தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 March 2022 10:04 PM IST (Updated: 16 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி

குரங்கு தொல்லை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலைகள், காப்புக்காடுகள் உள்ளன. வனப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உள்ளன. வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது மட்டுமின்றி மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள குரங்குகள் உணவை தேடி குடியிருப்புகளை நோக்கி படையெடுகின்றன. குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -நாதன், வாணாபுரம்.

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்

  திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர்நகர் கோவில் தெருவில் முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அருகிலேயே கோவில் உள்ளதால் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைத்துத் தர வேண்டும்.
  -வேணிமாதவன், துத்திப்பட்டு.

  வேலூர் சைதாப்பேட்டையில் கானார் மசூதி தெரு உள்ளது. இங்குள்ள கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மீண்டும் சரி செய்ய படாமல் உள்ளது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -மோகன்ராம், வேலூர்.

 சாலை பணியை முடிப்பாா்களா?

  வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் வார்டு எண்:1-க்கு உட்பட்ட கல்புதூர் ராஜீவ்காந்தி நகர், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பர்னீஸ்புரம் சாலை, ஆசிரியர் காலனி உள்ளிட்ட தெருக்களில் சாலை அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் பரப்பினர். இன்னமும் சாலை பணி நடக்கவில்லை. இதனால், நடப்பதற்கே சிரமமாக உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?
  -பி.துரை, கல்புதூர்.

பஸ் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டும்

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ் எண். 240-ஐ போளூர், ஆரணி, ஆற்காடு, பூந்தமல்லி வழியாக இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் பரிசீலனை செய்ய வேண்டும்.
  -கணேசன், கடலாடி.

வனப்பகுதியில் வீசப்படும் கழிவுகள்

  வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காப்புக் காடுகள், மலைகள் உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் சேகரிக்கப்படும் பாலிதீன் பைகள், கோழி, மாட்டு இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வந்து மலை, காப்புக்காடுகளில் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சாலை ஓரமும், வனப்பகுதி, மலைகளில் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -குருமூர்த்தி, தச்சம்பட்டு.

இரும்பு கம்பிகள் அகற்றப்படுமா?

  திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகம் சின்னக்கடை சாலையில் உள்ளது. இந்த அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டியவாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பணி முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. இரவில் நடந்து வருபவர்கள் திடீரென தடுமாறி கம்பியில் விழுகின்றனர். இதனால் அவர்களை கம்பிகள் பதம் பார்க்கிறது. எனவே அந்தக் கம்பிகளை அகற்ற வேண்டும். அங்கு முழுமையாக கால்வாய் பணியை முடிக்க ேவண்டும்.
  -ஆல்பர்ட், திருவண்ணாமலை.

டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற வேண்டும்

  தண்டராம்பட்டு ஒன்றியம் தொண்டமனூர் கிராம குடியிருப்பு மையப்பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அது, வீட்டின் அருகில் இருப்பதால் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
  -சாமிநாதன், தொண்டமனூர்.

உயர்கோபுர மின் விளக்கு தேவை

  ஆரணியில் இருந்து போளூர் செல்லும் சாலையில் பார்க்மார் பேட்டை, சந்தவாசல் இருந்து போளூர் செல்லக்கூடிய சாலையை சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் 3 பக்கமும் செல்லக்கூடிய சாலை என்பதால் அந்தப் பகுதியின் மையத்தில் உயர்மின் கோபுர விளக்கு மற்றும் போலீஸ் துறை சார்பில் பிரதிபளிப்பான் விளக்கு அமைக்க வேண்டும்.
  -ராகவேந்திரா, ஆரணி.


Next Story