அரசு உண்டு உறைவிட பள்ளியில் உணவு சாப்பிட்ட 10 மாணவிகளுக்கு மயக்கம்
கல்வராயன்மலையில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் உணவு சாப்பிட்ட 10 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள கொட்டபுத்தூரில் அரசு உண்டு உறைவிட மலைவாழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300 மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் வகுப்புக்கு வந்தனர். மதியம் 12 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவிகளை உடனடியாக கரியாலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இதுபற்றி அறிந்த மாவட்ட பழங்குடியினர் நல துணை கலெக்டர் இளங்கோவன், தாசில்தார் அசோக் மற்றும் கரியாலூர் போலீசார் பள்ளிக்கூடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story