ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இந்த ஊர்வலம் மாரியம்மன் கோவிலில் தொடங்கி, நிலக்கோட்டை நாடார் நடுநிலைப்பள்ளி, நால்ரோடு, நடராஜபுரம் தெரு, பெரிய காளியம்மன் கோவில் வழியாக மீண்டும் கோவிலில் முடிவடைந்தது.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், காரியதரிசிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலை பாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story