மராட்டியத்தில் 12 முதல் 14 வயது வரையிலான 39 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி
மராட்டியத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மும்பை, மார்ச்.17-
மராட்டியத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
12-14 வயது பிரிவினர்
கொரோனா வைரசுக்கு எதிரான வலிமையான பேராயுதம், தடுப்பூசி. அதனால்தான் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கி பல கட்டங்களாக விரிவுபடுத்தி வருகிறது.
12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அறிவிக்கப்பட்டபடி நேற்று தொடங்கியது. 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு ஐதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் மூலம் தயாரிக்கப்படுகிற கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 28 நாள் இடைவெளியில் இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த வயது பிரிவினர் 4.7 கோடி பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மராட்டியம்
மராட்டியத்திலும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 39 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி போடுவதை மாநில அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 சிறப்பு மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவு படி 28 நாட்கள் இடைவெளிவிட்டு குழந்தைகளுக்கு 2-வது டோஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story