சாலையோரம் தூங்கிய முதியவர் மீது கார் ஏறி இறங்கியது


சாலையோரம் தூங்கிய முதியவர் மீது கார் ஏறி இறங்கியது
x
தினத்தந்தி 16 March 2022 10:46 PM IST (Updated: 16 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் தூங்கிய முதியவர் மீது கார் ஏறி இறங்கி காயமடைந்தார்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னபொன்னேரி பகுதியை சேர்ந்தவர் காசி (வயது 60), கூலித் தொழிலாளி. இவர்  சின்ன பொன்னேரி கிராமத்தில் பொன்னேரி- குன்னத்தூர் சாலையில் சாலையோரம் உள்ள புளிய மரத்தடியில்  தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமுக்கனூர் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் ஓட்டிவந்த கார் காசியின் இரண்டு கால்கள் ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த காசியை அங்கிருந்து பொது மக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அ8்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காசியின் மகன் பழனிசாமி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story