நெல் வயலை பார்வையிட்ட பிரான்ஸ் சுற்றுலா பயணிகள்


நெல் வயலை பார்வையிட்ட பிரான்ஸ் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 March 2022 12:00 AM IST (Updated: 16 March 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே நெல் வயலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால் வெளிநாட்டினர் வரத்து அதிகரித்து வருகிறது.

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் அருகே நெல் வயலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால் வெளிநாட்டினர் வரத்து அதிகரித்து வருகிறது. 

தமிழக சுற்றுலா தலங்கள்

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் உலக அளவில் பிரசித்திப்பெற்றவை. தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், நாகரீகம் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தமிழகம் வருகிறார்கள். குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வருகை தருவது வழக்கம். 
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் வரவில்லை. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 

பிரான்ஸ் நாட்டினர் வருகை

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ஆடுதுறை பெருமாள் கோவில் என்ற குக்கிராமத்திற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரத்தை சேர்ந்த கிறிஸ்டியன், ஹார்வே, மார்க் கிறிஸ்டியன், கேத்தரின் ஆகிய 4 பேரை கொண்ட சுற்றுலா குழுவினர் நேற்று வந்தனர். 
இவர்கள் அங்கு உள்ள நெல் வயல்களை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். கடந்த 2 நாட்களாக இந்த குழுவினர் கும்பகோணம், பாபநாசம் ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களை பார்வையிட்டனர். 

மகிழ்ச்சி

தமிழர்களின் கலை, கலாசாரம், விருந்தோம்பல், உணவுகள் தங்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

Next Story