12 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி. முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடவங்கியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.
10 நாட்களுக்குள்
அப்போது மாவடத்தில் 80 சதவீத பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவனை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோர்பேவேக்ஸ் என்னும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் 35,000 பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளனர். 33,000 கொரோனா தடுப்பூசி வந்துள்ளது. அதனை 10 நாட்களுக்குள் செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதர 12 முதல் 14 வயதிற்குட்பட்ட நபர்களும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ளலாம். பெற்றோர்கள் அனைவரும் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட தங்களது குழந்தைகளுக்கு அனுமதி கடிதத்தை மாணவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story