கமுதி பகுதியில் மின்தடை


கமுதி பகுதியில் மின்தடை
x
தினத்தந்தி 16 March 2022 11:09 PM IST (Updated: 16 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

கமுதி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

கமுதி, 
கமுதி அருகே என்.கரிசல்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீராவி, ராமசாமிபட்டி, கே.எம்.கோட்டை, எம்.எம்.கோட்டை, கரிசல்குளம், கோரைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இதே போல் பரளச்சி மின்பாதையில், மின்பராமரிப்பு பணிகளால் முஷ்டகுறிச்சி, முதல்நாடு, சின்ன மணக்குளம், ஆசூர், கலைக்குளம், குடிக்கினியான் ஆகிய பகுதியிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 
அதே போல வீரசோழன் மின் பாதையில் மின் பராமரிப்பு பணி காரணமாக சின்னஉடப்பங்குளம், பெரியஉடப்பங்குளம், வலையபூக்குளம், மண்டலமாணிக்கம், காக்குடி, போத்தநதி, பெருமாள் தேவன்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கமுதி மின் உதவி செயற் பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.

Next Story