தேரோட்டம் பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
தேரோட்டம் பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் கிராமத்தில் உள்ள சென்றாய சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கெடியேற்றுத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை விழா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்.
இதனை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார்.
இந்த ஆய்வின் போது வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் ரவிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story