25 துணை தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 25 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் தனித்துணை தாசில்தாராக பணியாற்றி வந்த விமல்ராஜ் திண்டிவனம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், விழுப்புரம் மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனித்துணை தாசில்தாராகவும், செஞ்சி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், விழுப்புரம் பறக்கும் படை தாசில்தார் லட்சுமி மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், செஞ்சி தலைமையிடத்து துணை தாசில்தார் குணசேகரன் செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் வடிப்பக அலுவலக தனித்துணை தாசில்தாராகவும், திருவெண்ணெய்நல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் பாரதிதாசன் விக்கிரவாண்டி மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ரமேஷ் விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலக தனித்துணை தாசில்தாராகவும், விக்கிரவாண்டி தேர்தல் துணை தாசில்தார் வேலு விக்கிரவாண்டி வட்ட வழங்கல் அலுவலராகவும், மேல்மலையனூர் தேர்தல் துணை தாசில்தார் குபேந்திரன் விழுப்புரம் மண்டல துணை தாசில்தாராகவும், திருவெண்ணெய்நல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சிவா கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், மேல்மலையனூர் மண்டல துணை தாசில்தார் வேங்கடபதி முண்டியம்பாக்கம் தனித்துணை தாசில்தாராகவும், மரக்காணம் தேர்தல் துணை தாசில்தார் நாராயணமூர்த்தி மேல்மலையனூர் மண்டல துணை தாசில்தாராகவும் இவர்கள் உள்பட துணை தாசில்தார் நிலையில் உள்ள மொத்தம் 25 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மோகன் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story