முள்ளுக்குறிச்சியில் 2 நாட்களாக நடந்த மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
முள்ளுக்குறிச்சியில் 2 நாட்களாக நடந்த மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் லேம்ப் சொசைட்டியில் 2020-ம் ஆண்டு தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்னதாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு, கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், 5 பவுனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து அபராத வட்டி கட்ட சொல்லி கட்டாயப்படுத்துவதை நிறுத்த கோரியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வீட்டின் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நேற்றும் நீடித்தது. இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசுவாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு தெரிவித்து விவசாய கடனை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று இரவு போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story