கோடை வெயிலில் இருந்து தப்பிக்க போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு மோர்;சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மோர் வழங்கினார்.
நாகர்கோவில்,
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மோர் வழங்கினார்.
மோர் வினியோகம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கம். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அயராது பணியாற்றி வருகிறார்கள். எனவே, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு வெயிலுக்கு இதமாக மோர், குளிர்பானங்கள் வழங்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாருக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசாருக்கு கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ந்த மோர், ஜூஸ் மற்றும் தர்ப்பூசணி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலக சந்திப்பில் நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து நெரிசல்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே அந்த கால கட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு குளிர்பானம் வழங்கப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் களியக்காவிளை என அனைத்து இடங்களிலும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு காலையிலும், மாலையிலும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்தல் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story