மல்லசமுத்திரத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம்
மல்லசமுத்திரத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம் நடந்தது.
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் முதல் கூட்டம் நடந்தது. பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் திருமலை தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். மேலும் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமரின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்துக்கு, தகுதியான 50 பேரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி துணை தலைவர் மனோரஞ்சிதம், கவுன்சிலர்கள் சரவணன், கோகிலா, கலா, ரத்தினம், நிர்மலா, நளினி சுந்தரி, யுவராஜ், லட்சுமி, தங்கமணி, மேகலா, முருகேசன், சசிகலா, குணசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story