காரிமங்கலம் அருகே ஓடும் காரில் திடீர் தீ
காரிமங்கலம் அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
காரிமங்கலம்:
கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று முன்தினம் ஒரு கார் சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பக்கமுள்ள கும்பாரஅள்ளி சோதனைச்சாவடி அருகே வந்தபோது திடீரென காரில் தீப்பிடித்து கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் வந்தவர் கீழே குதித்து தப்பினார். இந்த தீவிபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் மளமளவென தீப்பிடித்து கார் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காரில் வந்தவர் சென்னையை சேர்ந்த வக்கீல் கபிலன் என்பதும், ஈரோட்டிற்கு சென்றபோது கார் தீப்பிடித்து கொண்டதும் தெரியவந்தது. இந்த தீவிபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
Related Tags :
Next Story