தர்மபுரியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் தர்மபுரி மின் திட்ட கிளை சார்பில் தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் கோகுல்தாஸ், நிர்வாகிகள் சக்திவேல், அழகேசன், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரிய ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story