அதியமான்கோட்டை அருகே விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட 4 கார்கள் தீயில் எரிந்து சேதம்
அதியமான்கோட்டை அருகே விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட 4 கார்கள் தீயில் எரிந்து சேதமானது.
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அங்குள்ள சென்றாயசாமி கோவிலுக்கு முன்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் குப்பை கொட்டப்பட்டு இருந்தன. மேலும் முட்புதர்கள் மண்டி காணப்பட்டது. இந்த முட்புதரில் நேற்று திடீரென தீப்பிடித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 கார்களுக்கு பரவி தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story