நல்லம்பள்ளி அருகே ஆறுமுகசாமி கோவில் கும்பாபிஷேக விழா


நல்லம்பள்ளி அருகே ஆறுமுகசாமி கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 16 March 2022 11:51 PM IST (Updated: 16 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே ஆறுமுகசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை அருகே புறவடை பண்ணைக்காரன்கொட்டாய் கிராமத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமதே ஆறுமுகசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை, பால்குட ஊர்வலம் மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் மற்றும் மூலவர் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசம் மற்றும் மூலவர், பரிகார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story