பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த வக்கீல் உள்பட 4 பேர் கைது
மதுரையில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வக்கீல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது
மதுரையில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வக்கீல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வக்கீல் உள்பட 4 பேர் கைது
மதுரை அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட உத்தங்குடி, அண்ணாநகர் பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் அந்த வீட்டின் கதவுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. எனவே அதில் ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன்படி மாநகர் துணை கமிஷனர் ராஜசேகரன் தலைமையில் அண்ணாநகர் சரக உதவி கமிஷனர் சூரக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, அனுராதா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, மதுரை வண்டியூரை சேர்ந்த முருகன்(வயது 37), மாரிமூக்கன் (24), வாடிப்பட்டி கார்த்திக்கண்ணன்(32) மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வக்கீல் சவுந்தரபாண்டியன்(40) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நகைகள் பறிமுதல்
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 18 ஆயிரத்து 700 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story