திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை 4 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 16 March 2022 11:53 PM IST (Updated: 16 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

திருடன் என நினைத்து வாலிபரை அடித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே, 
திருடன் என நினைத்து வாலிபரை அடித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட வாலிபர்
தானே மாவட்டம் பிவண்டி காயத்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்ரோஜ் கான் (வயது20). இவர் சம்பவத்தன்று தனது கூட்டாளிகளுடன் அங்குள்ள வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது.   இதனை கண்ட அப்பகுதி மக்கள் கும்பலை பிடிக்க முயன்றனர். இதில் தப்பி செல்ல முயன்ற அப்ரோஜ் கானை 4 பேர் சேர்ந்து மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் தப்பி சென்று விட்டனர். 
பிடிபட்ட அப்ரோஜ் கானை திருடன் என நினைத்து 4 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். தாக்குதலில் இருந்து விடுபட்டு தப்பி ஓட முயன்ற போது அங்கிருந்த சுவரில் இருந்து கீழே குதித்தார்.
4 பேர் கைது
இதில் தவறி விழுந்ததால் அப்ரோஜ் கான் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த அப்ரோஜ் கானின் தாய் சபானா சம்பவ இடத்திற்கு சென்று மகனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். 
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். தாய் சாபானா கொடுத்த புகாரின்பேரில் அப்ரோஜ் கானை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story