வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 March 2022 11:58 PM IST (Updated: 16 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி, மார்ச்.17-
திருச்சி காந்தி மார்க்கெட் பக்காளி தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 20), நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் (22), அஜ்மத் அலி (21). இவர்கள் காந்தி மார்க்கெட் பகுதியில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டதாக காந்தி மார்க்கெட் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைதொடர்ந்து இவர்கள் குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று விசாரணையில் தெரியவந்ததால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி சிறையில் இருக்கும் இந்த 3 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

Next Story