வேளிமலையில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு;அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
வேளிமலையில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
வேளிமலையில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ரப்பர் ஆராய்ச்சி நிலையம்
குமரி மாவட்டத்தில் புதிய ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைப்பது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ரப்பர் வாரிய நிர்வாக இயக்குனர் ராகவனிடம் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. எனவே ரப்பருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
ஒப்பந்த அடிப்படையில்...
தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில், ரப்பர் ஆராய்ச்சி நிலையத்திற்கென வேளிமலை வருவாய் கிராமத்தில் சுமார் 460 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அதனை இந்திய ரப்பர் வாரியத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நிலம் ஒப்பந்த அடிப்படையில் ரப்பர் வாரியத்திற்கு வழங்குவது குறித்தும், அதற்கான நிபந்தனைகள் குறித்தும் மத்திய வர்த்தக துறை செயலாளருக்கு கலெக்டர் வாயிலாக கடிதம் எழுதி இறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story