கீரனூர் வர்த்தக சங்க பொருளாளர் எம்.ஆர்.மனோகர் இல்ல திருமண விழா
எம்.ஆர்.மனோகர் இல்ல திருமண விழா நடைபெற்றது.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் வர்த்தக சங்க பொருளாளர் எம்.ஆர். மனோகர்-ம.அமுதா ஆகியோரது மகன் என்ஜினீயர் ம.அசோக் குமாருக்கும், திருச்சி மாவட்டம் தாழம்பாடி பத்திர எழுத்தர் ராஜா காவேரி மணியன்-ஒன்றிய கவுன்சிலர் இரா.கீதா ஆகியோரது மகள் சவுந்தர்யாவுக்கும் நார்த்தாமலை சுசீலாம்பிகா புதிய திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் கீரனூர் வர்த்தக சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உற்றார் உறவினர், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மணவீட்டார் சார்பில் வரவேற்றனர்.
Related Tags :
Next Story