முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து
x
தினத்தந்தி 17 March 2022 12:07 AM IST (Updated: 17 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து

திருச்சி, மார்ச்.17-
திருச்சி முக்கொம்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி  நடந்த ஒரு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  கலந்துகொண்டு பேசினார். அப்போது முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் கதவணை உடைந்ததற்கு அப்போது, இருந்த எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக திறமையற்ற ஆட்சி தான் காரணம் என குற்றம் சாட்டி பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஐகோர்ட்டு ஒப்புதல் வழங்கியது. இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நேற்று திருச்சி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வக்கீல் ஹேமந்த் ஆஜர் ஆனார். மு.க.ஸ்டாலின் தரப்பில் தி.மு.க. மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். ஐகோர்ட்டு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி கே.பாபு உத்தரவிட்டார்.

Next Story