சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள் அகற்றம்


சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 16 March 2022 6:46 PM GMT (Updated: 2022-03-17T00:16:28+05:30)

தோகைமலையில் சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

தோகைமலை, 
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து குளித்தலை- மணப்பாறை நெடுஞ்சாலை மற்றும் பாதிரிப்பட்டி பிரிவு சாலை வரை மெயின் ரோட்டில் கடை உரிமையாளர்கள் சிலர் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளை அமைத்து உள்ளதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட  கடை உரிமையாளர்களிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, கடை உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

Next Story