3 பேருக்கு 6 மாதம் சிறை
3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 1993 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பணிபுரிந்தவர் முருகேசன். இவர் பாண்டி, குருசாமி ஆகியோர் உதவியுடன் வங்கி பணம் 6 லட்சத்து 34 ஆயிரத்தை கையாடல் செய்தார்களாம். இதுகுறித்து அவர்கள் 3 பேர் மீதும் சிவகங்கை மாவட்ட வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரததேவி குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், பாண்டி, குருசாமி ஆகிய 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.300 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story